சென்னையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அதிமுக பொதுக்குழு கூடுகிறது. அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்திலிருந்து எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் தனது இல்லத்திலிருந்து பொதுக்குழுவில் பங்கேற்பதற்கு புறப்பட்டனர். இவர்களை வரவேற்பதற்கு வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி வரவேற்றனர்.
ஒற்றை தலைமை தொடர்பாக அதிமுகவில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அதிமுக அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பலர் போலி அடையாள அட்டையுடன் வந்து இருப்பதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே பொதுக்குழுவில் மோதல் ஏற்படும் சூழல் இருக்கும் நிலையில் அடையாளம் தெரியாத பலர் போலி அடையாள அட்டையுடன் வந்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் கலவரம் வெடிக்கலாம் என்று கூறப்படுகிறது.