அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு தொடங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது இந்த மனு மீதான விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி வாதாடுகிறார். அப்போது எடுத்த எடுப்பில் நீதிபதி முக்கிய கேள்வி எழுப்பி உள்ளார்.. அதாவது பொதுக்குழு விதிகள் பின்பற்றி நடத்தப்பட்டதா? இல்லையா என்ற வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.. விசாரணை நடைபெற்று வருகிறது.