Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு கூட்டம்… பேனர்களில் ஓ.பன்னீர்செல்வம் புகைப்படம் நீக்கம்… வெளியான பரபரப்பு தகவல்…!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவாகாரம் தலை தூக்கி கட்சியை இரண்டாக நிற்கிறது. கடந்த மாதம் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்து விட்டதாகவும், வருகின்ற 11ஆம் தேதி மீண்டும் பொது குழு நடைபெறும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. அதன்படி வானகரத்தில் பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த முறை திருமண மண்டபத்தில் உள்ளே நடைபெறாமல் மண்டப வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம், விஸ்வநாதன், தங்கமணி, அன்பழகன் கே.பி. முனுசாமி, பெஞ்சமின் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

தற்போது பொதுக்குழு நடக்கும் இடத்தில் மழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் தரையில் இருந்து மூன்று அடியை உயரத்துக்கு மேடை போன்ற அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை முன்னாள் அமைச்சர் நடந்து சென்ற படி ஆய்வு செய்தபோது நத்தம் விஸ்வநாதன் திடீரென கால் தவறி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெஞ்சமின் உள்ளிட்ட மற்றவர்கள் பதறி அடித்தபடி அவரை தூக்கி விட்டனர். அதன் பிறகு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி, அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து கடந்த முறை நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி பூங்கொத்து கொடுப்பது போன்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுக்கான வரவேற்பு பேனர்களில் ஒரு பேனரில் கூட ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைவர்களுக்காக பேனரில் ஒதுக்கப்பட்ட சிறிய சிறிய இடங்களில் கூட பன்னீர்செல்வம் படம் இடம் பெறவில்லை.

Categories

Tech |