Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு விவகாரம்….. சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனு….!!!!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொது குழு கடந்த 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் அனைவரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது .

அதிமுகவிலிருந்து தன்னை நீக்கியது செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் கூறி வருகிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையதளம் ஓபிஎஸ் தரப்பு முறையீடு செய்துள்ளது. சட்ட போராட்டத்திற்கு ஓபிஎஸ் தயாராகி வருகிறார் . இந்நிலையில் அதிமுக பொது குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது குழு முடிவுகளுக்கு எதிராக எதுவும் மனு தாக்கல் செய்யப்படாததால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்க கூடாது என்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |