Categories
மாநில செய்திகள்

‘அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு’….. வெளியான பரபரப்பு பேட்டி….!!!!

சென்னை வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “அதிமுக பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும். 23 தீர்மானங்களில் ஒரு சில தீர்மானங்கள் தவிர்த்து பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவியே தற்போது இல்லை. சட்டவிதிகளின் படி பொதுக்குழு கூட்டம் நிச்சயம் நடைபெறும். ஜூலை 11-ல் பொதுக்குழுவில் 99% நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். ஈபிஎஸ்க்கு 99% நிர்வாகிகளின் ஆதரவு உள்ளது. ஓபிஎஸ்க்கு 1% நிர்வாகிகளே ஆதரவாக உள்ளனர்” என்றார். இதற்கிடையில் பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என்றும் ஈபிஎஸ் தரப்பு சர்வாதிகார மனப்பான்மையோடு செயல்படுவதாகவும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |