கோவை மாவட்டம் விளாங்குறிச்சி ரோடு 24வது வட்டக் கழகச் செயலாளர் லட்சுமணன் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம் உள்பட பல திட்டங்களை அச்சிட்டு ஒட்டி இருந்தார். இந்நிலையில் கோவை அவினாசி சாலையில் மேம்பலத்தின் தூண்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்ட்டர்களை மர்மநபர் ஒருவர் கிழிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து தகவலறிந்த அ.தி.மு.க தொண்டர்கள் அதே இடத்தில் மீண்டுமாக அதிமுக அரசின் திட்டங்களை விளக்கும் போஸ்ட்டர்களை ஒட்டி இருக்கின்றனர்.
இதற்கிடையில் கோவை அவினாசி சாலையில் 10 கிலோ மீட்டர் தூரம்வரை உள்ள திமுக-வின் போஸ்டர்களை கிழிக்காமல் அதிமுக போஸ்டரை மட்டும் கிளித்துள்ளதாக அதிமுக-வினர் குற்றம்சாட்டுகின்றனர். மேம்பால தூண்கள் மற்றும் பொதுயிடங்களில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என மாநகராட்சி ஆணையரின் உத்தரவுகளை மீறி திமுக, அதிமுக, பாஜக-வினர் தொடர்ந்து போஸ்டர்களை ஒட்டி வருவதால் பொது மக்களிடையே பெரும் அதிருப்தியையும், முகசுளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் மீண்டும் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடந்த நிலையில் தற்போது இச்சம்பவங்கள் அரங்கேறி உள்ளது