தமிழகத்தில் வன்னியர் சமுதாய இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக மீது திட்டமிட்டு பழி சுமத்துவது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை அதிமுக முறையாக நிறைவேற்றவில்லை என்ற முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியது முற்றிலும் தவறானது என்று குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சி நீடித்திருந்தால் வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று கூறியுள்ளார். திமுக அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது பழி சுமத்துகிறது. விழுப்புரத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தை கைது செய்தது வன்மையாக கண்டிக்க கூடிய செயல் என்றும் கூறியுள்ளார்.
Categories