Categories
மாநில செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது…. சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு….!!!

அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.கரூர் மற்றும் சென்னையில் உள்ள அவருக்கு சொந்தமான 21 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத்துறையில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. 30-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை, கல் குவாரி, அவரது சகோதரர் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு புகார் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |