சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீதான விசாரணை இன்று நடந்தது. அதில் எம்எல்ஏ பரமசிவத்திற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.1991 முதல் 1996 வரை சின்ன சேலம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த இவர்,வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கு விசாரணையில் பரமசிவத்திற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 33 லட்சம் அபராதம் விதித்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.