அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி பழனிசாமி கோவையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் இன்று அதிகாலை 3 மணிக்கு பழனிசாமி வீட்டிற்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதன் பின்பு அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பழனிசாமி அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தியுள்ளார் என்ற தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் முன்னாள் எம்பியாக கே சி பழனிச்சாமி நாமக்கல் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 1989ஆம் ஆண்டு தேர்வானார். இந்நிலையில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக 2018 ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு அதிமுக தலைமையின் மீதும் அதிமுக அரசு மீதும் கடுமையான விமர்சனங்களை வைத்து வந்த கேசி பழனிசாமி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்