அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராதா கிருஷ்ணன் திடீரென உயிரிழந்தார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார். இவர் எம்பி ஆவதற்கு முன்பு விருதுநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் மற்றும் சிவகாசி ஊராட்சி மன்ற தலைவராக மூன்று முறை பதவி வகித்தார். 67 வயதான இவர் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்ட உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு அதிமுக பிரபலங்கள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories