தமிழகத்தில் ஸ்டாலின் எங்களைப் பற்றி பேசுவதால் அதிமுக வாக்கு அதிகரிக்கும், அவருக்கு நன்றி என கடம்பூர் ராஜு கிண்டலடித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்கே.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக பற்றி பல்வேறு விமர்சனங்களை செய்து வருகிறார். அதனால்தான் எங்களைப் பற்றி பேசுவதால் அதிமுக வாக்கு வங்கி அதிகரிக்கிறது, அவருக்கு நன்றி என்று கடம்பூர் ராஜு கிண்டலடித்துள்ளார். தமிழகத்திற்கு திமுக எதுவும் செய்யாது, செய்து கொண்டிருக்கும் எங்களைப் பற்றியும் ஸ்டாலின் குறை கூறுகிறார் என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.