Categories
உலக செய்திகள்

அதிரடியாக ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்… சிறையில் தலைவர்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

மியான்மர் அரசை கைப்பற்றிய இராணுவம் நாட்டின் தலைவரை இறக்குமதியில் முறைகேடு செய்ததாக சிறை பிடித்துள்ளது.  

மியான்மர் அரசு மற்றும் ராணுவத்திற்கு இடையில் பொது தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆட்சியை அதிரடியாக கைப்பற்றிய ராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் ஜனாதிபதி வின் மைன்ட் போன்ற பல முக்கிய அரசியல் தலைவர்களையும் மூத்த அரசு அதிகாரிகளையும் அதிரடியாக கைது செய்ததோடு சிறையில் அடைத்துள்ளது.

மேலும் நாட்டில் வரும் ஒரு ஆண்டிற்கு ராணுவ ஆட்சிதான் நடைபெறும். அதற்குப் பின்பு தேர்தல் நடைபெறும். அதில் வெற்றி பெறுபவருக்கு  அதிகாரம் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. தலைவர் ஆங் சான் சூகி இறக்குமதி முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும் இவர் வருகின்ற 15ஆம் தேதி வரை சுமார் 14 நாட்கள் காவலில் வைக்கப்படுவார் என்று தகினாத்ரி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் ஜனாதிபதி வின் மைன்ட் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தை மீறி செயல்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து ஆங் சான் சூகி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வாக்கி டாக்கி கருவிகள் 10 மற்றும் சில தகவல் தொடர்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இவற்றை அனுமதி பெறாமல் ஆங்சாங் சுகி இறக்குமதி செய்துள்ளார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் இறக்குமதி முறைகேடு வழக்கில் இந்த கருவிகளை ஆதாரமாக அதிகாரிகள் சமர்ப்பிக்க இருப்பதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

Categories

Tech |