கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. மேலும் வாகனப் போக்குவரத்து செலவானது அதிகமாவதால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. முன்பே எரிப்பொருள் விலை அதிகரிப்பால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காய்கறிகள் உள்ளிட்ட தினசரி பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே குறிப்பிட்ட ஒருபொருளின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது நாடு முழுதும் ஏராளமான மாநிலங்களில் எலுமிச்சைப்பழத்தின் விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில் 1 சிறிய எலுமிச்சைபழத்தின் விலை குறைந்தது ரூபாய் 10க்கு விற்கப்படுகிறது. வழக்கமாக கோடைக் காலத்தில் எலுமிச்சையின் தேவையானது அதிகமாக இருக்கும் என்பதால் அதன் விலை சற்று அதிகரிக்கும். ஆனால் இந்த விலை உயர்வு ஏழை, எளிய மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது.