Categories
மாநில செய்திகள்

அதிரடியாக களம் இறங்கிய திருச்சி மேயர்… அஞ்சி நடுங்கும் அதிகாரிகள்… !!!!!

மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

திருச்சி மாநகராட்சி மேயராக 3 அன்பழகன் மற்றும் துணை மேயராக திவ்யா போன்றோர் கடந்த 4ஆம் தேதி பதவி ஏற்றுள்ளனர். இரண்டு முறை துணை மேயர், ஐந்து முறை கவுன்சிலிங் என நீண்ட அனுபவம் கொண்ட அன்பழகன் மாநகராட்சி தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிந்தவர் என கூறப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளும்  மேயர் அன்பழகனுக்கு அத்துப்படி என்று திமுகவினர் பாராட்டு வருகின்றார்கள்.

அதற்கு ஏற்றார்போல் ஆரம்பம் முதலே அதிரடியாக களத்தில் இறங்கி மக்கள் பணி செய்து வருகிறார். மேயர் அன்பழகன் கடந்த 18ஆம் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மேயர் அன்பழகன், கோடைகாலம் என்பதனால் குடிநீர் பிரச்சனைகளை போக்க குடிநீர் குழாய் சீரமைக்கப்படும், குடிநீர் மேல்நிலை தொட்டிகள் பராமரிப்பு குடியிருப்புகளுக்கு வழங்கப்படும். மேலும் குடிநீர் குழாய் இணைப்புகள் அதிகரிப்பு போன்றவை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் மாநகராட்சி நிதியாண்டு முடியும் தருவாயில் இருக்கிறது. அதே நேரத்தில் பல கோடி ரூபாய்க்கு மேல் வரி பாக்கி இருக்கிறது. அதனை வசூல் செய்யும் பணியை தீவிரப்படுத்த 100 விழுக்காடு வரிவசூல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் அன்பழகன் உத்தரவிட்டிருக்கிறார். மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்கள் வீட்டு வரி, தொழில் வரி, சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் போன்றவற்றால் ஏப்ரல் – செப்டம்பர் முதல் தவணையும், அக்டோபர், மார்ச் இரண்டாம் தவணையும் செலுத்தவேண்டும் மார்ச் 31 ஆம் தேதியில் தவணை காலம் முடிவடைகிறது.

இதனால் வரி பாக்கியை உடனடியாக வசூல் செய்ய நான்கு மண்டல அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டிருக்கிறது. இதுபற்றி மாநகராட்சி ஆணையர் முயற்சியில் முஜிபுர்  ரகுமான் கூறியபோது, மாநகராட்சியில் சுமார் 60 கோடி வரி பாக்கி இருக்கிறது. வரி செலுத்துவது குறித்து வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் வரி வசூல் மையங்கள் அனைத்து நாடுகளுக்கும் செயல்படும் குறிப்பிட்ட காலத்திற்குள் வரி செலுத்தாத குடியிருப்புகள் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். மாநகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு வரவேற்பு  தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |