வாரத்தின் முதல் நாளான நேற்று திங்கள்கிழமை ஏற்றத்துடன் தொடங்கிய தங்கம் விலை வாரத்தில் இரண்டாவது நாளான இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 இன்று காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.51 குறைந்து ஒரு கிராம் ரூ.5020 விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 408 குறைந்து, ரூ. 40,168 க்கு விற்பனை ஆகிறது. தங்கத்தின் விலையானது குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.75.70க்கு விற்பனையான நிலையில் இன்று1.10 காசுகள் குறைந்து ரூ.74.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது