ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது Meteor 350 மற்றும் ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான விலையை அதிரடியாக குறைந்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் தனது மோட்டார் சைக்கிளில் மாடல்களின் விலையை சமீபத்தில் உயர்த்தி இருந்தது. இந்நிலையில்புதிய Meteor 350 மற்றும் ஹிமாலயன் மாடல்களுக்கு விலை குறைப்பை தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிவித்துள்ளது, இந்தியாவில் ராயல் என்பீல்டு Meteor 350 மற்றும் ஹிமாலயன் மாடல்கள் ட்ரிப்பர் நேவிகேஷன் வசதியுடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இரு மாடல்களும் ட்ரிப்பர் நேவிகேஷன் அம்சம் விரும்புவோர் தேர்வு செய்யும் அக்சஸரியாக வழங்கப்பட இருக்கிறது.
அந்த வகையில் இந்த அக்சஸ் இன்றி Meteor 350 மற்றும் ஹிமாலன் வாங்குவோருக்கு விலையில் ரூபாய் 5000 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் சிப்செட் குறைபாடு காரணமாக உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்நிறுவனம் ட்ரிப்பர் நேவிகேஷன் அம்சத்திற்கான குறைபாட்டை எதிர்கொள்ளும் வகையில், ராயல் என்பீல்டு நிறுவனம் அதனை அக்சஸரியாக மாற்றி இருக்கிறது. இதைத்தவிர ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வரும் மாதங்களில் புதிய ஹண்டர் 350, ஹிமாலயன் 450, ஷாட்கன் 650 மற்றும் சில மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.