நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து சீனா கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட டோங்காவிற்கு பல உதவிகளை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
தெற்கு பசிபிக் நாடுகளில் ஒன்றான டோங்கா கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டோங்காவிற்கு ஏற்கனவே பல நிவாரண பொருட்களை கப்பல் மற்றும் விமானத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது அந்நாட்டிற்கு ராஜங்க ரீதியில் பல உதவிகளை செய்து வரும் சீனா அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது டோங்காவிற்கு 1,00,000 அமெரிக்க டாலர் நிவாரணத் தொகையும், அவசரகால உதவி பொருட்களையும் அனுப்பி வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.