அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்த ஜெர்மன் நாட்டின் கடற்படை தளபதி ரஷ்யா-உக்ரைன் எல்லை தொடர்பாக பேசிய கருத்து ஒன்று சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்குமிடையில் கிரீமியா தொடர்பாக பல காலமாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் தங்களது படைகளை குவித்து வருவதால் அமெரிக்கா உட்பட பல நாடுகள் அதற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு இருக்க அரசு முறை பயணமாக இந்தியா சென்றிருந்த ஜெர்மன் நாட்டின் கடற்படைத் தளபதியான கே அச்சிம் ஷென்பாக் ரஷ்யாவிற்கு ஆதரவாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புதின் விரும்புவது மரியாதை மட்டுமே என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி உக்ரைனின் எல்லையில் படைகளை குவிப்பது அந்நாட்டை கைப்பற்றுவதற்காக என்று எண்ணுவது முட்டாள்தனம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவருடைய இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆகையினால் ஜெர்மன் நாட்டின் கடற்படைத் தளபதியான கே அச்சிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.