புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் பத்து பைசா கொடுத்து பிரியாணி வாங்க கூட்டம் அலைமோதியது.
தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் பொன்னகரம் அடுத்து உள்ள ஒகேனக்கல் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த மூன்று வருடங்களாக பெங்களூரு மற்றும் சென்னை பகுதிகளில் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது புதிதாக உணவகம் தொடங்கிய இவர் வாடிக்கையாளர்களை கவர முதல் நாளில் அதிரடி ஆஃபர் ஒன்று அறிவித்தார்.
சற்று வித்தியாசமாக பாலாஜி பத்து பைசா கொண்டு வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி என்ற விளம்பரத்தை வெளியிட்டார். இதனை தொடர்ந்து கிராம மக்கள் பலர் பத்து பைசாவுடன் கடையில் குவிந்தனர். பத்து பைசாவை வாடிக்கையாளர்களிடம் பெற்றுக்கொண்டு டோக்கன் கொடுக்கப்பட்டது.
டோக்கனை வாங்கிய வாடிக்கையாளர்கள் சிக்கன் வாங்கிச்சென்றனர். இதனால் கடை திறந்து சில மணி நேரத்திலேயே இருந்த பிரியாணி முழுவதுமாக விற்பனையானது. கடைக்கு பிரியாணி வாங்க வந்த பலரும் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.