அருண் விஜய் நடிக்கும் சினம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
அருண் விஜய் 1995 ஆம் வருடம் வெளியான முறை மாப்பிள்ளை என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர். இவர் தற்போது நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகின்றார். கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் எனும் படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்த பின் அவருடைய கதை தேர்வு வித்தியாசமானதாக இருந்தது.
இதனை தொடர்ந்து அவர் நடித்த தடம், குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், மாபியா போன்ற படங்களின் வெற்றி அவருக்கு திருப்பங்களாக அமைந்துள்ளது. தற்போது அருண் விஜய் ஹரிதாஸ் படத்தை இயக்கிய எம்ஜிஆர் குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இந்த படத்தின் பின்னணி இசையை சமீர் இசையமைத்திருக்கின்றார். ஆக்சன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் அருண் விஜய் சப்-இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இந்த சூழலில் நீண்ட இடைவெளிக்குப்பின் சினம் வரும் 9 ரிலீஸ் செய்தியை பட குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கின்றது. இதில் ஒரு பெண்ணின் கொலை வழக்கு விசாரிக்கும் காவல் அதிகாரியாக வரும் அருண் விஜய் கொலையை கண்டுபிடிக்க மேற்கொள்ளும் முயற்சிகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த ட்ரெய்லரானது தற்பொழுது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.