Categories
சினிமா தமிழ் சினிமா

‘எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்’… அதிரடி ஆர்யாவின் டைட்டிலுடன் வந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனான ஆர்யா ‘அறிந்தும் அறியாமலும்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான சர்வம், ராஜா ராணி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய திரைப்படங்கள் ஹிட்டானது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘மகாமுனி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் நடிகர் ஆர்யா மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான சாயிஷா நடிப்பில் டெடி திரைப்படம் தயாராகியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டில் வெளியாகியுள்ளது. பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ‘சார்பட்டா’ என்று தலைப்பிட்டுள்ளது.

Categories

Tech |