Categories
உலக செய்திகள்

அதிரடி: “இருதரப்பு மோதல்”… பிணைக்கைதிகளாக கடத்தப்பட்ட வீரர்கள்…. நடக்கப்போவது என்ன?…!!

ஐ.நா அமைதிப்படையினர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்குமிடையே அதி பயங்கர மோதல் நடந்துள்ளது.

செனகலிலுள்ள கசமான்சா என்னும் மாநிலத்தை கிளர்ச்சியாளர்கள் தன்னிச்சையாக ஆளும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள். இந்த கிளர்ச்சியாளர்களுக்கும், உள்நாட்டு படையினருக்குமிடையே அதி பயங்கர மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்து ஐ.நா தலைமையிலான அமைதிப்படையில் செனகல் வீரர்கள் இடம்பெற்று அண்டை நாடான கேம்பியாவில் அமைதியை நிலைநாட்ட பணிபுரிந்து வருகிறார்கள்.

இவ்வாறு இருக்க கிளர்ச்சியாளர்கள் கேம்பியாவில் அமைதியை நிலை நாட்ட ஐ.நா தலைமையில் செயல்படும் அமைதிப்படையில் பணி புரியும் செனகல் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

இந்த தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்த தோடு மட்டுமின்றி 9 பேரை கிளர்ச்சியாளர்கள் பிணைக்கைதிகளாக கடத்தி சென்றுள்ளார்கள்.

Categories

Tech |