லாகூரிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் பகுதி ஒன்றில் வழிபாட்டுத் தலங்களை குறி வைத்து தாக்குதல் நடத்துவதற்காக பதுங்கியிருந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் 2 பேரை அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் உதவியோடு கைது செய்துள்ளார்கள்.
பாகிஸ்தானிலுள்ள லாகூரிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் பகுதி ஒன்றில் வழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் நோக்கில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் உதவியோடு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள்.
இதன்மூலம் வழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் நோக்கில் சுற்றித்திரிந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்துள்ளார்கள். அவர்களிடமிருந்து வெடிமருந்துகள் உட்பட பல பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்கள்.