அமெரிக்காவின் துணை அதிபருக்கும், தனக்குமிடையே கருத்து வேறுபாடு என்று பரவிய தகவலை மறுக்கும் விதமாக அந்நாட்டின் தலைவரான ஜோ பைடன் அவரை பாராட்டியுள்ளார்.
அமெரிக்காவின் தலைவரான ஜோ பைடனுக்கும், அந்நாட்டின் துணை அதிபருக்குமிடையே கருத்து வேறுபாடு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு எடுக்கும் எந்த ஒரு முடிவிலும் கமலா ஹரிஷின் பங்களிப்பு கிடையாது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இதனை மறுக்கும் விதமாக அதிபர் ஜோ பைடன் கமலா ஹரிசை பாராட்டும் விதமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது கமலா ஹரிஷ் தனது துணை அதிபர் பதவியை மிக சிறப்பாக கொண்டு செல்வதாக கூறியுள்ளார். அதோடு மட்டுமின்றி அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டால் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹரிஷ் வேட்பாளராக நிற்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.