Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அதிரடி சரவெடியில்…. ‘ஹிட் மேன்’ ரெக்கார்டை காலி செய்த “ஸ்மிருதி”…… என்ன சாதனை தெரியுமா?…. நீங்களே பாருங்க..!!

ரோகித் சர்மாவின் சாதனை மட்டுமில்லாமல் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் இந்திய வீர மங்கை ஸ்மிருதி மந்தானா….

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது உலகப் புகழ்பெற்ற 2022 காமன்வெல்த் போட்டிகள்.. வரலாற்றிலேயே முதன்முறையாக மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளும் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து உட்பட உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக்  போட்டிகள் கடந்த ஜூலை 29ஆம் தேதி தொடங்கி நடந்து முடிந்த நிலையில், குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் நாக்கவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.

இதனைத் தொடர்ந்து நேற்று மதியம்  (ஆகஸ்ட் 6ஆம் தேதி) 3.30 மணி அளவில் எட்ஜ்பஸ்டன் நகரில் தொடங்கிய முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணி மோதியது. ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி டாஸ் வென்று  பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 164 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தானா 32 பந்துகளில் 61 ரன்கள் (8 பவுண்டரி, 3 சிக்ஸர்) விளாசினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 31 பந்துகளில் 44 ரன்களும், தீப்தி சர்மா 20 பந்துகளில் 22 நாட்களும் எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று பதக்கத்தை உறுதி செய்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 27 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்திருந்தாலும், கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது. கடைசி ஓவரை சினே ராணா வீசிய நிலையில், முதல் 2 பந்துகளில்  ஒரு ரன் மட்டுமே கொடுத்தார். மூன்றாவது பந்தில் விக்கெட் எடுத்தார். மேலும் கடைசி மூன்று பந்தில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலையில், 1, 1, 6 என 8 ரன்களை  மட்டும் எடுத்ததால் இந்தியா 4 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. இன்று இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் இறுதி போட்டியில் மோதுகிறது.

இந்த போட்டியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த மங்கையான ஸ்மிருதி மந்தனா முதல் ஓவரிலிருந்து அதிரடியாக பவுண்டரியும் சிக்சரும் பறக்க விட்டதால் அவர் வெறும் 23 பந்துகளை மட்டுமே சந்தித்து சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற தனது சாதனையை தானே முறியடித்துள்ளார்.

ஸ்மிருதி மந்தனாவின் அதிவேக அரைசத பட்டியல் :

*2022 – இங்கிலாந்துக்கு எதிராக 23 பந்துகளில் அரைசதம்

2019 – நியூசிலாந்துக்கு எதிராக 24 பந்துகளில் அரைசதம்

2018 – இங்கிலாந்துக்கு எதிராக 25 பந்துகளில் அரைசதம்

அதேசமயம் இந்த போட்டியில் பவர் பிளே ஓவர்களிலேயே அதிரடி காட்டிய ஸ்மிருதி மந்தானா 51  ரன்களை விளாசி  இருக்கிறார். இதன் மூலம் பவர்ப்பிளே ஓவரில் அரை சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார். அதாவது ,ஆடவர் அல்லது மகளிர் என ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே ஓவரில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை தகர்த்தெறிந்து சாதனை படைத்துள்ளார்.

இதோ அந்த விவரம் :

ஸ்மிருதி மந்தானா :  51* ரன்கள் (இங்கிலாந்துக்கு எதிராக)

ரோகித் சர்மா : 50 ரன்கள் (நியூஸிலாந்துக்கு எதிராக)

கேஎல் ராகுல் : 50 ரன்கள் (ஸ்காட்லாந்துக்கு எதிராக)

ஷபாலி வர்மா : 49 ரன்கள் (தென்னாபிரிக்காவுக்கு எதிராக)

அதுமட்டுமில்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பின்னர் 2000 ரன்களை குவித்த இந்திய ஒப்பனிங் பேட்ஸ்மேன் என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளார் ஸ்மிருதி.

 

அத்துடன் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதங்கள் அடித்த இந்தியர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.

இதோ அந்த விவரம் :

1. ஸ்மிரிதி மந்தனா & ரோஹித் சர்மா : 9* அரைசதங்கள்

2. விராட் கோலி : 6 அரை சதங்கள்

3. கெளதம் கம்பீர் : 5 அரை சதங்கள்

அதுமட்டுமில்லாமல் இந்திய அணியின் டி20 கிரிக்கெட் போட்டியில் சேசிங்கின் போது அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார் ஸ்மிருதி மந்தனா.

விராட் கோலி  : 1,789

ரோகித் சர்மா : 1,375

ஸ்மிருதி மந்தானா : 1059

இது ஒரு புறம் இருக்க இந்தக் காமன்வெல்த் தொடரில் அதிக ரன்கள், அதிகரை சதம், அதிக பவுண்டரிகள் அதிக சிக்ஸர்கள் அடித்த வீராங்கனை ஆகவும் ஸ்மிருதி முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சாதனைகளை படைத்துள்ள ஸ்மிருதிக்கு அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்… இதனால் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் மந்தனா..

Categories

Tech |