இந்தியா – இங்கிலாந்து இடையான முதலாவது 20 ஓவர் வர கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இன்று இரவு 10:30 மணிக்கு ரோஸ் பவுல் மைதானத்தில் சவுத்தாம்ப்டனில் தொடங்குகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.கடந்த ஆண்டு இரு அணிகளுக்கும் இடையான நடைபெற்ற கடைசி ஐந்து ஒரு ஆட்டங்களில் இந்தியா அதிகபட்சமாக மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் விளையாடும் 11பேர்:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
இங்கிலாந்து அணியில் விளையாடும் 11பேர்:
ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (c & wk), டேவிட் மாலன், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி ப்ரூக், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ், ரீஸ் டோப்லி, மேத்யூ பார்கின்சன்