நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 216 விலை குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 27 குறைந்து ஒரு கிராம் 4805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 216 குறைந்து ரூ.38,440-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலையானது குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 72.90-க்கு விற்பனையான நிலையில் இன்று 0.60 காசுகள் குறைந்து ரூ. 72.30-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.