ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டிலிருந்து டோங்கா தீவில் சுனாமியினால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிடுவதற்காக விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
பசுபிக் பெருங்கடலுக்கடியிலுள்ள எரிமலை ஒன்று கடந்த சனிக்கிழமையன்று வெடித்து சிதறியுள்ளது. இதனால் ஏற்பட்ட சுனாமி டோங்கா தீவை பெருமளவு தாக்கியுள்ளது.
ஆகையினால் டோங்கா தீவில் இணையத்தள சேவைகள் உட்பட அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டிலிருந்து டோங்கா தீவில் சுனாமியினால் ஏற்பட்ட இழப்புகளை கண்காணிப்பதற்காக விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளது.