காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் விற்பனைக்காக கொண்டுவந்த 40 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கமுதியை அடுத்துள்ள அபிராமம் பகுதியில் துணை சூப்பிரண்டு அதிகாரி மணிகண்டனின் உத்தரவின்படி அபிராமம் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஆட்டோவில் இருந்த 2 பேரிடம் அரசால் தடை செய்யப்பட்ட
40 கிலோ 200 கிராம் புகையிலை பாக்கெட்டுகள் இருந்துள்ளது. இதனையடுத்து ஆட்டோவில் இருந்த வீரசோழன் கிராமத்தை சேர்ந்த அப்துல் ரகீம், முகமது பரூக் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் புகையிலை பாகெட்டுகளையும், அவரிடம் இருந்த 46,900 ரூபாயையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.