ஆஸ்திரேலியா அமெரிக்காவின் பைசர் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கும் தடுப்பூசியை பூஸ்டர் டோஸ்ஸாக 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு செலுத்த அனுமதி அளித்துள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனாவுக்கு எதிராக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட 93 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை முழுமையாக பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசு அதிரடி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 16 முதல் 17 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்ஸை செலுத்த அனுமதி அளித்துள்ளது.
இந்த பூஸ்டர் டோஸ்ஸாக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசியை வழங்க ஆஸ்திரேலியா ஒப்புதல் அளித்துள்ளது.