Categories
உலக செய்திகள்

அதிரடி தகவல்: “ரஷ்யாவின் திட்டம்” தெளிவாக தெரிகிறது…. நாங்கள் பதிலடி கொடுப்போம்…. எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா….!!

அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்யாவை எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் நாட்டை நோட்டா அமைப்பில் இணைக்க கூடாது என்று அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்துள்ளது.

ஆனால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதனால் கடுப்பான ரஷ்யா தனது இராணுவ படைகளை உக்ரைன் நாட்டின் எல்லையில் குவித்து வருகிறது.

இதனைக் கண்ட அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் அமெரிக்கா ரஷ்யாவை எச்சரித்துள்ளது.

அதாவது ரஷ்யா நடப்பாண்டின் பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது படையெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

மேலும் ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்து அதனை தங்கள் வசப்படுத்திக் கொண்டால் அதற்கான தகுந்த பதிலடியை நாங்கள் கொடுப்போம் என்றும் அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் அந்நாட்டை எச்சரித்துள்ளார்.

Categories

Tech |