துருக்கியிலுள்ள இஸ்தான்புல்லில் இருக்கும் விமான நிலையத்தில் காலநிலை மாற்றத்தால் பனி குவிந்து காணப்படும் நிலையில் 2-வது நாளாக அங்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
துருக்கியிலுள்ள இஸ்தான்புல்லில் காலநிலை மாற்றத்தால் மிகக்கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டிலுள்ள விமான நிலையத்தில் ஏராளமான பனி குவிந்து காணப்படுகிறது.
அவ்வாறு குவிந்து காணப்படும் பனியால் 2 ஆவது நாளாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மிக கடுமையான பனிப்பொழிவால் 4,600 பேர் சாலைகளில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.
மேலும் இந்த பனிப்பொழிவு காரணமாக இஸ்தான்புல்லில் போக்குவரத்து சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் பேரிடர் மற்றும் அவசரகால ஆணையம் தெரிவித்துள்ளது.