Categories
அரசியல்

அதிரடி: தமிழ்நாட்ட “தி.மு.க” இல்லனா “அ.தி.மு.க” தான் ஆளும்…. “தாமரை” என்னைக்குமே மலராது…. ஆவேசமாக பேசிய TR….!! .

தமிழ்நாட்டை அறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட தி.மு.க அல்லது அ.தி.மு.க கட்சிகள்தான் ஆளும் என்று அவரது நினைவு நாளை முன்னிட்டு டி.ராஜேந்திரன் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க கட்சியிலிருக்கும் தலைவர்கள் தொடர்ந்து நீடித்தால் அங்கு ஒரு போதும் தாமரை மலராது என்று பேச்சாளர் டி.ராஜேந்திரன் அறிஞர் அண்ணா நினைவுநாளையொட்டி அவருடைய படத்திற்கு மலர் தூவிய பின் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதாவது, தமிழ்நாட்டை எப்போதுமே அறிஞர் அண்ணா உருவாக்கிய கட்சிகளான தி.மு.க அல்லது அ.தி.மு.க தான் ஆளும் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி அ.தி.மு.க கட்சியை சசிகலா, எடப்பாடி, பன்னீர் செல்வம், டிடிவி ஆகியோர் ஒன்று கூடி அழித்துவிட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடி மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களையும், அங்கிருக்கும் ஈழத் தமிழர்களையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |