ஜியோ, ஏர்டெல் மற்றும் விஜ ஆகியவற்றில் ரூ .600 க்கு கீழ் சுமார் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் பற்றி பார்க்கலாம்.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அளவுக்கு அதிகமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதனால் ஜியோ சிம் கார்டு அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. ஜியோ, ஏர்டெல் மற்றும் விஜ ஆகியவற்றில் ரூ .600 க்கு கீழ் சுமார் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் பற்றி பார்க்கலாம்.
ஜியோ ப்ரீபெய்ட் பிளான்
ஜியோ நிறுவனத்தின் 444 ரூபாய் ப்ரீப்பெய்ட் திட்டத்தில் நாள்தோறும் 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் மொத்தம் 112 ஜிபி டேட்டா உங்களுக்கு கிடைக்கும். அனைத்து நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகளை மேற்கொள்வதுடன், JioCinema, JioTV சேவைகளை கூடுதலாக பெற்றுக்கொள்ளலாம்.
599 ரூபாய் ஜியோ ப்ரீப்பெய்ட் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. 444 ரூபாய் திட்டத்தில் வழங்குவதுபோல் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், மெசேஜ் மற்றும் ஜியோ சினிமா உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் கிடைக்கும். இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வேலிடிட்டி காலம் கூடுதலாக இருக்கும். 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 598 ரூபாய் ஜியோ ப்ரீப்பெய்ட் திட்டத்தை தேர்தெடுத்தால் சில கூடுதல் அம்சங்களை பெற்று மகிழலாம். அதாவது, இந்த திட்டத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டார் விஐபி-ஐ கூடுதலாக பயன்படுத்திக்கொள்ளலாம். நாள்தோறும் 100 எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொள்ளலாம்.
ஏர்டெல் ப்ரீபெய்ட் பிளான்
ஏர்டெல் நிறுவனத்தின் 449 ரூபாய் ப்ரீப்பெய்ட் திட்டத்தில் நாள்தோறும் 2 ஜிபி டேட்டா மற்றும் அமேசான் பிரை சந்தாவை 30 நாட்களுக்கு பெற்றுக்கொள்ளலாம். 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும். அனைத்து நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கும் அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். கூடுதலாக, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா, விங்க் மியூசிக் மற்றும் ஷா அகாடமி ஆகியவையும் வழங்கப்படுகிறது. இலவச ஹலோ டியூன்ஸ் மற்றும் ஃபாஸ்டேக்கில் ரூ.150 கேஷ்பேக் ஆகியவற்றையும் பெறலாம்.
வோடாஃபோன் ஐடியா பிளான்
595 ரூபாய் தொகையில் வோடாஃபோன் ஐடியா வழங்கும் ப்ரீப்பெய்ட் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் ஜீ 5 ப்ரீமியம், வி திரைப்படங்களை பார்த்து ரசித்துக்கொள்ளலாம். ஒருமுறை இந்ததிட்டத்தை தேர்தெடுத்தால் வருட முழுவதும் தொலைக்காட்சி வழியாகவும் திரைப்படங்களை பார்த்து ரசிக்கும் வாய்ப்பை கொடுக்கிறது. 56 நாட்கள் வேலிடிட்டி. அன்லிமிட்டெட் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ் கொடுப்பதுடன், வார இறுதி டேட்டா ரோல் ஓவரையும் கொண்டுள்ளன.
பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் பிளான்
பிஎஸ்என்எல் ரூ.187 ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, 100 தினசரி எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் (லோக்கல் / எஸ்டிடி) கால்களை வழங்குகிறது. இந்த பட்ஜெட் பிஎஸ்என்எல் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியில் கொடுக்கப்படுகிறது.