Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதிரடி வாகன சோதனை…. காற்று ஒலிப்பான்களை அகற்றிய அதிகாரிகள்…. !!

பேருந்துகளில் இருந்து அதிகாரிகள் காற்று ஒலிப்பான்களை அகற்றினர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் வகையில் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருப்பதாக புகார்கள் வந்தது அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் அதிகாரிகள் தஞ்சை புதிய பேருந்து நிலையம் மற்றும் பட்டுக்கோட்டை புறவழி சாலை ஆகிய பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பலவித சத்தத்துடன் அதிக ஒலி எழுப்பும் வகையில் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்களை பொருத்தியிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் 15-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் இருந்து காற்று ஒலிப்பான்களை அகற்றினர். மேலும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |