காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சாலை வீதிகளை மீறிய 679 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் ராமநாதபுரம் காவல் உட்கோட்ட பகுதிகளில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசிகொண்டு சென்ற 49 பேர் மீது, குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்ற ஒருவர் மீது, வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்ற 7 பேர் மீதும், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய 26 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற 536 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 59 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன்படி மொத்தம் 679 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து 85,100 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா குறித்த அச்சமின்றி முக கவசம் அணியாமல் சாலைகளில் சுற்றித் திரிந்த 33 பேரிடம் இருந்தும் அபராதம் வசூலித்த காவல்துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.