Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிரடி வேட்டையில் போலீசார்…. மூட்டை மூட்டையாக சிக்கிய புகையிலை…. 2 பேர் கைது….!!

தடை செய்யப்பட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றது. இதனை தடுக்க மாவட்ட் சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் உத்தரவின்படி காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பரமக்குடி பகுதியில் கடை வைத்திருக்கும் சில்லறை வியாபாரிகளுக்கு வெளிமாநிலத்தில் இருந்து லாரி மூலம் புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் பரமக்குடி பெரியகடை பஜார் வீதியில் ராமஜெயம் என்பவருக்கு சொந்தமான குடோனில் புகையிலை பொருட்கள் இருப்பது உறுதியானது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய சோதனையில் சுமார் 54 மூட்டைகளில் 20 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் குடோன் உரிமையாளர் ராமஜெயம் மற்றும் லாரி டிரைவர் மகேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |