Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

அதிரவைக்கும் பள்ளி கட்டணம் – அதிரடி உத்தரவு

கொரோனா பெருந்தொற்றால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால்  அரசாங்கம் தொடங்கி பொதுமக்கள் வரை பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வீட்டு வாடகை தொடங்கி பண பரிவர்த்தனைகள் சம்மந்தமான ஏராளமான விஷயங்கள் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழக அரசாங்கமும் மக்கள் நலன் கருதி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

வீட்டு வாடகை வசூலிக்க கட்டாயப்படுத்தக்கூடாது தொடங்கி பள்ளி கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றெல்லாம் உத்தரவு பிறப்பித்து. இதனால் கல்வி கட்டணம் தொடர்பாக கல்வி நிறுவன உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது ஒருபுறமிருக்க சென்னையில் தனியார் பள்ளி கட்டணம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பள்ளி கட்டணத்தில் 50 சதவீதத்தை வருகின்ற வியாழக்கிழமைகள் செலுத்த சென்னை தனியார் பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ரூபாய் 55 ஆயிரம் – 70 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளத்திற்கு கட்டணம், நூலகக் கட்டணம் என பலவகைகள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணங்களை குறைக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசு இப்படியான பள்ளிகள் மீது நடவடிவக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Categories

Tech |