உத்திரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பிரான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முசிப்பூர் பகுதியில் தனது வீட்டின் முன்பு சிறுமி ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது அதே கிராமத்தில் வசித்து வந்த சலீமுதின் மற்றும் ஆசிப் போன்ற இருவரும் அந்த வழியே வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் சிறுமியை அடித்து தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி பிஜூவா பகுதியில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்புடைய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் முன்பே புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இருந்த போதிலும் அதில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமுடன் இருந்ததற்காக காவல் அதிகாரி சுனில் என்பவர் சஸ்பென்ஸ் செய்யப்பட்டிருக்கிறார் என போலீஸ் சூப்பிரண்ட் சஞ்சீவ் சமன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் குடும்பத்தினர் மற்றும் சிறுமி சிகிச்சையின் போது அளித்த வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த இருவர் மீதும் சிறுமியின் குடும்பத்தினர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டும் தெரிவித்திருக்கின்றார்கள். இது குறித்து தேவையான விசாரணை மேற்கொள்ளப்படும் என எஸ்பி சஞ்சீவ் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்கி மோர் கேரி மாவட்டத்தில் லால்பூர் மஜ்ரா தமோலி பூர்வா கிராமத்தில் கடந்த 14ஆம் தேதி இரண்டு தலித் சிறுமிகளின் உடல்கள் ஒரே மரத்தில் தூக்கில் தொங்கி நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கோரி கிராம மக்கள் மற்றும் சிறுமிகளின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் சிறுமிகள் கொலை வழக்கில் மூன்று பேர் அந்த சிறுமிகளை பாலியல் வன்முறை செய்து கொலை செய்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருக்கின்றார்கள்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த போலீஸ் சூப்பிரண்ட் சஞ்சீவ் சுமன் இந்த கொலை வழக்கு தொடர்பாக சுஷேல் ஜூனைது,ஹபிசுல் ரகுமான், கரிமுதீன் மற்றும் ஆரி போன்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஆறாவதாக கைது செய்யப்பட்ட சோட்டு என்பவர் அந்த சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் தான் மற்றவர்களிடம் அந்த சகோதரிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். மேலும் போலீசார் அவரையும் கைது செய்து இருக்கின்றனர் இந்த இரண்டு சிறுமிகளையும் பக்கத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் லக்கிம்பூர் கெரி பகுதியில் இரண்டு தலித் சிறுமிகளின் பலாத்காரத்திற்கு பின் மரத்தில் தொங்கவிடப்பட்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து வெளியே வருவதற்குள் அதே மாவட்டத்தில் மற்றொரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.