Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சியில் உயிரிழந்த மூதாட்டி….. என்னவா இருக்கும்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை தாம்பரத்தில் உள்ள மதுரபாக்கத்தில் 137 ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணிகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பையும் மீறி கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆக்ரமிப்பு வீடுகள் பெருமளவு இடிக்கப்பட்டது. இதனையடுத்து மீதமுள்ள வீடுகளை நேற்று முன்தினம் இடிக்க வருவாய்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக கடந்த 8 ஆம் தேதி இரவு மீதமுள்ள வீடுகளை காலி செய்யுமாறு ஆக்கிரமிப்புகார்களுக்கு வருவாய் துறையினர் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் 2 வது முறையாக மீண்டும் வருவாய்த்துறையினர் வீடுகளை இடிக்க வருவதாக அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 70 வயதான மூதாட்டி கோவிந்தம்மாள் அதிர்ச்சியில் உயிரிழந்தார். இதனால் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த வருவாய் துறையினர் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.

Categories

Tech |