Categories
விளையாட்டு

அதிர்ச்சியில் ஐபிஎல் ரசிகர்கள்…..! ஒரு டிக்கெட் விலை ரூ.65 ஆயிரம்….. பிசிசிஐ முடிவு….!!!!

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டிக்கான ஒரு டிக்கெட் விலை அதிகபட்சமாக 65,000 ரூபாய் வரை நிர்ணயித்து பிசிசிஐ ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் 100 சதவீத பார்வையாளர்களுடன் பிளே ஆப் சுற்றுக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து முதல் முறையாக இறுதிப் போட்டி நடைபெறும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு குறைந்தபட்ச விலையாக ரூபாய் 700 நினைத்து, அடுத்தபடியாக 1500 ரூபாய், அதற்கு மேல் 2000, 2500 என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் 3500 ரூபாய் என்றும். 4500 ரூபாய் என்றும், 7500 ரூபாய் என்றும் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போன்று அதிக படியான விலையாக 14 ஆயிரம் ரூபாய், 20 ஆயிரம், ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் மற்றும் அதிகப்படி விலையாக 60 ஆயிரம் ரூபாய் என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குறைந்தபட்ச டிக்கெட் விலை 250 ரூபாய் ஆகவும், அதிகபட்சம் 500 முதல் 14 ஆயிரம் வரை இருந்த இந்த டிக்கெட் பல மடங்கு உயர்ந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |