Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!… ஆப்பிள் பழத்தில் மயக்க மருந்து… 15 சிறுமிகளை சீரழித்த சாமியார்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கர்நாடகா சித்ரதுர்கா மாவட்டத்திலுள்ள முருகமடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருகா சரணரு சுவாமி(64). சென்ற செப்டம்பர் மாதத்தில் ஆசிரமத்திலிருந்த 2 சிறுமிகளை வன்கொடுமை செய்த வழக்கில் சரணரு சுவாமி கைதானார். அப்போது அவருடன் மடத்தின் வார்டன், 2 ஊழியர்கள், வழக்கறிஞர் ஒருவர் என 4 பேரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது குறித்த குற்றப்பத்திரிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.

அவற்றில், மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு சிறுமிகளுக்கு ஆப்பிள் பழத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பலாத்காரம் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர். இந்த செயலுக்கு விடுதி வார்டன் ரஸ்மி மற்றும் இருவர் உடந்தையாக செயல்பட்டு இருக்கின்றனர். அதாவது இவர்கள் இரவில் சிறுமிகளை மடாதிபதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமிகளை மிரட்டி மடத்தின் அலுவலகம், படுக்கை அறை, கழிவறை உள்ளிட்ட பகுதிகளில் சிவமூர்த்தி முருகா சரணரு பலாத்காரம் செய்ததாக அதில் கூறப்பட்டு உள்ளது.

அத்துடன் சாமியாரின் ஆசைக்கு இணங்கமறுக்கும் சிறுமிகளை வார்டன் நைஸாக பேசி மயக்கமருந்து கலந்த ஆப்பிளை கொடுத்து மயக்கமுற செய்த பிறகு சாமியார் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்பட்டு உள்ளது. எனினும் சாமியாரிடம் விசாரணை நடத்திய போது தான் எந்த தவறும் செய்யவில்லை என்று தொடர்ந்து மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |