Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி! இங்கிலாந்திலிருந்து வந்த நபரால்…. தமிழ்நாட்டில் “புதுவகை கொரோனா?”…!!

இங்கிலாந்திலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால் புது வகை கொரோனாவோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் புதியதாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது முந்தைய கொரோனா வைரஸை விட மிகவும் தீவிரமாகப் பரவி வருகிறது என்று பிரிட்டன் அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் பிரிட்டன் விமான போக்குவரத்தை ஒவ்வொரு நாடுகளாக துண்டித்து வருகின்றன. இந்த புதிய வகை வைரஸுக்கான மாதிரிகள் ஆஸ்திரேலியா, இத்தாலி போன்ற நாடுகளிலும் கண்டறியப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் அனைத்து நாடுகளும் உஷார் நிலையில் இருக்கிறன. மேலும் இந்தியாவிலும் எஹரிக்கையோடு இருக்குமாறு மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் இங்கிலாந்திலிருந்து இருந்து சென்னை வந்த தனிமைப்படுத்திக் கொண்ட ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. புதிய வகை கொரோனாவா என்று பரிசோதிக்க அவருடைய மாதிரிகள் புனேக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதனுடைய முடிவில் தான் தெரியவரும். மேலும் அதிகாரிகள் அனைவரும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர்.

Categories

Tech |