Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி: “இதுக்கு மட்டும் தான்” வெயிட்டிங்…. உக்ரைனை தாக்க காத்திருக்கும் ரஷ்யா…. வெளியான ஷாக் தகவல்….!!

ரஷ்யாவுக்கு வெளியே அந்நாட்டு படைகளை பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கும் படி அதிபர் விளாடிமிர் புதின் நாடாளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ரஷ்யா உக்ரைனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குதித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை ரஷ்யா தனி நகரமாக அங்கீகரித்துள்ளது. அதுமட்டுமின்றி டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளுக்கு ரஷ்யா தங்களது படைகளையும் அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புதின் அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கு முக்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதாவது ரஷ்யாவின் படைகளை அந்நாட்டிற்கு வெளியேவும் பயன்படுத்த ஒப்புதல் வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ரஷ்ய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கினால் டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளிலிருக்கும் ரஷ்ய படைகள் உக்ரைனின் எல்லையில் நிலை நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்பு உக்ரைனின் அரசுப் படைகளின் மீது ரஷ்ய ராணுவ வீரர்கள் படை எடுப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |