போதிய வருமானம் இல்லாததால் சிவம் சஹாகாரி வங்கி இனி இயங்காது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
போதிய மூலதனம் மற்றும் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சிவம் சஹாகாரி வங்கியின் உரிமத்தை ரத்து செய்ய உள்ளதாக ரிசர்வ் வங்கி காரணம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 29-ஆம் தேதி சிவம் சஹாகாரி வங்கி இயங்காது. வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு 99 விழுக்காட்டினருக்கு முழு காப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கி கணக்கு வைத்திருப்பவர்களும் டெபாசிட் காப்பீடு தொகை 5 லட்சம் ரூபாயை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
இது வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போதிய மூலதனம் இல்லாத இந்த வங்கியை தொடர்ந்து இயங்க அனுமதிப்பதால் டெபாசிட் செய்தவர்களின் நலனுக்கு நல்லதல்ல என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இதை தொடர்ந்து தொழில் செய்ய அனுமதித்தால் பொது நலன் பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.