போர்ச்சுக்கல் நாட்டின் பிரதமருக்கு அறிகுறிகள் எதுவுமின்றி கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தன்னை 7 நாட்கள் சுய தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
போர்ச்சுக்கலில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் அண்டோனியோ என்பவர் பிரதமர் பதவியை வென்றுள்ளார். இந்நிலையில் இவருக்கு எந்தவித அறிகுறிகளுமின்றி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் லூசா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு கொரோனா உறுதி செய்யப்பட்ட பிரதமர் தன்னை 7 நாட்கள் சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த தகவலை பிரதமர் அண்டோனியா அந்நாட்டின் ஜனாதிபதியான மார்சிலோவிடம் கூறியதாகவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.