Categories
உலக செய்திகள்

“அதிர்ச்சி!” உலகையே அச்சுறுத்த புதிய ஆயுதம்… கைக்கோர்த்த பிரபல நாடுகள்.. ரகசிய தகவல் வெளியீடு …!!

ஐக்கிய நாடுகள் சபையின் ரகசிய அறிக்கையில், வடகொரியா மற்றும் ஈரான் இணைந்து ஏவுகணை திட்டத்தை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் ரகசிய அறிக்கையில், வடகொரியா மற்றும் ஈரான் அதிக தூரத்திற்கு ஏவுகணையை மேம்படுத்தும் திட்டத்திற்கு மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில், பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்குரிய சில முக்கிய பாகங்களை ஈரானுக்கு வடகொரிய வழங்கிவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவை கடந்த வருடம் சமீபத்தில்தான் வடகொரியாவிலிருந்து  ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் வடகொரியாவில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் என்ன? மற்றும் இந்த இரு நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை எந்த வகையில் உள்ளது போன்ற குறித்த முழுமையான விபரம் வெளியாகவில்லை. மேலும் இந்த ரகசிய அறிக்கையில், Haj Ali Movahead என்ற ஆராய்ச்சி மையமானது, செயற்கைக்கோளை ஏற்றிச் செல்லக்கூடிய ராக்கெட்டை உருவாக்குவதற்கு வடகொரியாவின் ஏவுகணை நிபுணர்களிடம் ஆதரவு மற்றும் உதவியை கேட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |