Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி… காதல் பிரச்சனையா?… தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து!!

சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி சுவேதாவை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். பட்டப்பகலில் மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.. காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் கத்தியால் குத்தினாரா? என்று சேலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |