Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி …! கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.94,985 மின்கட்டணம்…. மின்வாரியம் சொன்ன பதில்….!!!!

ஈரோடு மாவட்டம் மல்குத்திபுரம் தொட்டியை சேர்ந்தவர் ரேவண்ணா (40). கூலித் தொழிலாளி. இவர் தனது வீட்டுக்கு 40 முதல் 50 யூனிட் வரையே மின்சாரம் பயன்படுத்தி வந்தார். ஒவ்வொரு வீட்டுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பதால் கடந்த சில ஆண்டுகளாக ரேவண்ணாவின் வீட்டுக்கு மின் கட்டணம் அதிகம் செலுத்தியதில்லை.

இந்நிலையில் நேற்று அவரது செல்போனுக்கு 94 ஆயிரத்து 985 ரூபாய் மின் கட்டணம் கட்ட வேண்டும் என குறுஞ்செய்தி வந்தது. இதை பார்த்த ரேவண்ணா அதிர்ச்சியாகியுள்ளார். பின்னர், அவர் தாளவாடி மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டார். அதற்கு அவர்கள், ‘மின்கட்டணம் கணக்கீடு செய்யும்போது குளறுபடி ஏற்பட்டிருக்கும். அதை சரிசெய்து தருகிறோம்’ என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |